Tuesday, 25 July 2023

நீங்க Daily Internet யூஸ் பண்ணும் நபரா.. முதலில் இதை படிங்க! வந்தது பரபர வார்னிங்

இணையச் சேவை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நெட்டிசன்களை கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது திடீர் வார்னிங் வர என்ன காரணம் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது அனைத்துமே இணையம் என்றாகிவிட்டது. பல ஆயிரம் கொடுத்து புது புது கருவிகளை வாங்குவதில் தொடங்கி 10 ரூபாய் கொடுத்து டீ வாங்குவது வரை அனைத்துமே இணையம் வழியாகவே செய்து கொண்டிருக்கிறோம். இதில் ஏகப்பட்ட நன்மைகள் கொட்டி கிடக்கும் அதே வேலையில் சில பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது. இணையத்தால் ஏற்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
வார்னிங்: இப்படித்தான் இப்போது புதிதாக நம்மைத் தாக்கும் அகிரா என்ற ஆபத்தான ரேன்சம்வேர் குறித்து மத்திய அரசு நெட்டிசன்கள் எச்சரித்துள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸில் இயங்கும் கணினிகளைக் குறிவைத்துத் தாக்குகிறது. இதில் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரேன்சம்வேர் நமது சிஸ்டத்தை தாக்கினால் முதலில் நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடிவிடும். அதன் பிறகு அவற்றை என்கிரிப்ட் செய்துவிடுகிறார்கள். தரவுகள் வேண்டும் என்றால் பெருந்தொகையைச் செலுத்த வேண்டும் எனக் கேட்பார்கள். மேலும், பணத்தைத் தரவில்லை என்றால் அத்தனை தகவல்களையும் டார்க்வெப்பில் விற்றுவிடுவோம் என்றும் மிரட்டுவார்களாம். விபிஎன் சேவை மூலமாகவே நமது சிஸ்டத்தை இந்த ரேன்சம்வேர் தாக்குகிறது. குறிப்பாக மல்டிஃபாக்டர் ஆத்தென்டிகேஷன் இல்லாத கருவிகள் தான் குறிவைக்கப்படுகிறது. AnyDesk, WinRAR மற்றும் PCHunter என்று பயனாளிகள் சந்தேகமடையாத சாப்ட்வேர்கள் மூலமாகவே அவர்கள் சிஸ்டத்தை ஹேக் செய்கிறார்கள், எச்சரிக்கை: இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமீபத்தில் அகிரா என அழைக்கப்படும் ரேன்சம்வேர் தாக்குதல் சைபர்ஸ்பேஸில் நடக்க ஆரம்பித்துள்ளது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என இரண்டையும் குறிவைக்கிறது. இது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முதலில் தகவல்களைத் திருடி, பின்னர் அந்த தரவை என்க்ரிப்ட் செய்கிறது. தரவுகளைப் பெறப் பணத்தைப் பறிக்கிறது. இல்லையென்றால் டேட்டாக்களை டார்க்வெப்பில் விற்போம் என மிரட்டுகிறது" என்றார் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் சிஸ்டத்தில் AnyDesk இருக்கும். மேலும், WinRAR மற்றும் PCHunter போன்ற சாப்ட்வேர்களும் நிச்சயம் இருக்கும். எனவே, இதை வைத்தே யாரும் சந்தேகம் கொள்ளாத வகையில் இந்த ஹேக்கர்கள் நமது சிஸ்டத்தை முடக்குகிறார்கள். மேலும் டெக்னிக்கலாக அந்த ரேன்சம்வேர் எப்படிச் செயல்படுகிறது என்பதையும் அவர்கள் அதில் விளக்கியுள்ளனர். பாதுகாப்பாக இருப்பது எப்படி: இணையத்தில் நாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினாலே இதில் இருந்து நாம் தப்பிக்கலாம். முதலில் தேவையற்ற லிங்குககளை கிளிக் செய்யக் கூடாது. பாதுகாப்பு இல்லாத தளங்களுக்குச் செல்லக் கூடாது. யாரென்றே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெயிலை ஒபன் செய்யவோ அதில் இருக்கும் லிங்குகளை க்ளிக் செய்யவோ கூடாது. இதை முறையாகப் பாலோ செய்தால் அகிரா மட்டுமின்றி எந்த ரேன்சம்வேரில் இருந்தும் நாம் தள்ளி இருக்கலாம். கூடுதலாக, பயனர்கள் முக்கியமான தரவுகளை பேக்அப் எடுத்து வைக்கலாம். அதுபோன்ற நேரங்களில் சிஸ்டம் ஹேக் ஆனாலும் நாம் அது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. சிஸ்டத்தை முறையாக அப்டேட் செய்து வைப்பது. வலுவான ஆன்ட்டிவைரஸை வைத்திருப்பது ஆகியவையும் நமக்கு உதவும். மேலும், மல்டி ஆத்தென்டிகேஷன், வலுவான பாஸ்வேர்ட்டை வைப்பதும் நம்மை காக்கும். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

No comments:

Post a Comment