Friday, 28 July 2023

வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இனி அனைத்து பள்ளி மாணவர்களுக்குமே சைக்கிள் கிடைக்கும்

11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. நேற்றைய தினம், விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்தியக்கண்டநல்லூர், க.பில்ராம்பட்டு, மேலக்கொண்டூர ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் இரு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பொன்முடி பேசினார். பூரிப்பு: அப்போது, நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை போன்று கிராமப்பற மாணவர்களும் பள்ளிக்கல்வி முதல் உயர் கல்வி வரை பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள், ஆய்வகம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன" என்று பெருமிதம் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடி: இந்நிலையில், இன்று விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் பொன்முடி.. அப்போது பேசும்போது, இனி வருங்காலத்தில் இலவச மிதிவண்டி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்குமே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.. அதன்படி, ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஏராளமான மாணவர்கள் இந்த விலையில்லாத மிதிவண்டிகளை பெற்று வருகிறார்கள்.. ஆனால் கடந்த வருடம் கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.. இது தொடர்பாக நிறைய கேள்விகளும் வெடித்து கிளம்பிய நிலையில், முதல்வரே இதற்கு ஒரு பதிலை கூறியிருந்தார்.
அதிரடி அறிவிப்பு: அதன்படி, வரும் 2023 - 2024ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் இந்த உத்தரவுக்கு பிறகு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு, மிதிவண்டிகள் வழங்கப்பட்டும் வருகின்றன.. அதன்படிதான், இன்றைய தினமும் விக்கிரவாண்டி பள்ளியில் சைக்கிள்களை வழங்கினார் பொன்முடி. அப்போதுதான், வருங்காலத்தில் இனி அனைத்து பள்ளி மாணவர்களுக்குமே சைக்கிள் கிடைக்கும் என்று சொல்லி அரசடித்துள்ளார். எங்கள் Telegram குழுவில் இணையுங்கள்

No comments:

Post a Comment