Saturday, 28 October 2017

PF Details

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

நாமினி!

"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!

பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?

பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!

பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும்.
இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். 

Thursday, 26 October 2017

GST


ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான்

மனைவி ஒரு நாள் தன் கணவனுக்கு பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்...

இன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்... தெரு முழுவதும் மீன் குழப்பு வாசனை.. கணவன் குமார் வந்ததும்..மனைவி வேகமாக வந்து...குடிக்க தண்ணீர் தந்து, சாப்பிட அமரச் சொன்னாள்..

மனைவி சாப்பாடு பரிமாறினாள்.. குமார் சாப்பிட தொடங்கினான்.

மனைவி கேட்டாள்.. "என்னங்க குழம்பு எப்படி இருக்கு"..? என்று..

குமார்.. "நல்லா இருக்கு, ஆனாலும் எங்க அம்மா கைப்பக்குவம் உனக்கு இல்ல.. எங்கம்மா வைப்பாங்க பாரு மீன் குழம்பு.. தெருவே மணக்கும்... ருசி அப்பப்பா.. சூப்பரா இருக்கும் என்றான்..

அம்மா குழம்பின் ருசியை பாராட்டி...சாப்பிட்டு முடித்து எழுந்தான்..
ராணிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..கணவன் தன் குழம்பின் ருசியை பாரட்டாததை நினைத்து..

'எப்ப பாரு அம்மா..அம்மா'னு.. அவரு அம்மா'வ தான் தூக்கி வச்சி பேசுவாரு..' என்று முணு,,முணுத்தாள்..

அப்போது அவளுடைய 17 வயது மகன் சாப்பிட வந்தான்... சாதம் எடுத்து வைத்தாள்... மகன் ஒரு வாய் சாதம்.. சப்பிட்டு விட்டு தன் அம்மா வை பாராட்ட ஆரம்பித்தான்..

"அம்மா சூப்பர் மா.. எப்படிம்மா இப்படி சமைக்குறீங்க..? தெருவே மணக்குதும்மா..!! உங்க அளவுக்கு யார்னாலையும் மீன் குழம்பு வைக்க முடியாதும்மா..." என்று பாராட்டினான்..

அவளுக்கு புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும், எவ்வளவு ருசியாய் சாப்பிட்டாலும், தன் தாயின் குழம்பை மட்டும் தான் அதிகம் பாராட்டுவான் என்று..

நம் மகனும் அம்மா.. அம்மா என்று தானே உயர்த்தி பேசுகிறான்.. மகன் பேசுவது தவறு இல்லை யென்றால்.. கணவன் பேசியதும் தவறில்லை தான்.. என்று புரிந்து கொண்டாள்..

*_இப்படி புரிந்து கொள்ளும் ஒரு அன்பான மனைவி அமைந்தால் அவளும் ஒரு அம்மா தான் கணவனுக்கு..!_*

Saturday, 21 October 2017

Important news


*பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712*
1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,
 2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,
வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,
2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்
இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்"
பெற
ஆதரவு இயக்க அறக்கட்டளை
90437 44957,
82200 44957
web atharavuiyakam.weebly.com

2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம்.
"RED SOCIETY" @ 9940217816.

3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
BLOOD GROUP @ www.friendstosu
pport.org

4. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம்.
இணையதள முகவரி :
www.campuscouncil.com

5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :- 9842062501 & 9894067506.

6. இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்ள
முகவரி :
Kodaikanal PASAM Hospital > From 23rd March to 4th April by German Doctors.
தொலைபேசி எண்கள் : 045420-240668, 245732
"Helping Hands are better than Praying Lips"

7. நீங்கள் கீழே இருந்து ஓட்டுநர் லைசென்ஸ்,ரேஷன் கார்டு,பாங்க் பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் எதையாவது கண்டெடுத்தால் அருகிலுள்ள தபால் பெட்டியில் சமர்பித்தால்,அந்த ஆவணங்கள் உரியவரிடம் பத்திரமாக சேர்ந்து விடும்.

8. கண் தானத்திற்கான தொலைபேசி எண்கள் : 04428281919 and 04428271616
(Sankara Nethralaya Eye Bank). மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பாருங்கள்.
இணையதள முகவரி : http://
ruraleye.org/

9. 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இங்கே அணுகவும்.
Sri Valli Baba Institute Bangalore. 10.
தொலைபேசி எண்கள் : 9916737471

10.  இரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற.
முகவரி :-
"Adyar Cancer Institute in Chennai".
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: NearMichael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241

11.ஏதாவது விழாக்காலமா? வீட்டில் ஏதாவது விருந்து பார்ட்டியா? அதில் உணவு மீந்து விட்டதா?
அதை குப்பையில் கொட்டாதீர்கள்.நீங்கள் இந்த எண்ணினை 1098 (இந்தியாவில் மட்டும் ) தொடர்பு கொண்டால் அதைB வாங்கி பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.#தமிழ்


பகிர்வோம்  மக்களே!!!!

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#